புலிகளின் முகாம் இருந்த இடத்தில் வெடிபொருட்கள் மீட்பு!

கிளிநொச்சி திருவையாறு 2ஆம் பகுதியில் தனியார் காணி ஒன்நில் அடையாளம் காணப்பட்ட வெடிபொருட்கள் இன்று நீதிமன்றின் அனுமதியுடன் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் நேற்று முன்தினம் வெடிபொருட்கள் அடையாளம் காணபப்பட்டதை அடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்டன. குறித்த காணியில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸாருக்கு பொது மக்களால் தகவல் வழங்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிசார் அவற்றை அகற்றவதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டனர்.

இந்த நிலையில் இன்று முற்பகல் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின்அனுமதியுடன் அப்பகுதியில் காணப்பட்ட வெடி பொருட்கள் விசேட
அதிரடிப்படையினரால் பாதுகாப்பாக அகற்றப்பட்டன. குறித்த வெடி பொருட்கள் பயன்படுத்த முடியாதவை என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை பாதுகாப்பாக
செயலிழக்க செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்ட்டுள்ளதாக பொலிசார்
தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியார் காணியில் விடுதலைப்புலிகள் முகாம் அமைத்து இருந்துள்ளதுடன், தொடர்ந்து இராணுவத்தினர் அப்பகுதியில் முகாமிட்டிருந்த
நிலையில் கடந்த வருடமளவில் குறித்த காணி விடுவிக்கப்பட்டது. குறித்த வெடிபொருட்கள் எத்தரப்புக்கு சொந்தமானவை என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

Paid Ad
Previous articleவாழ ஒரு வாய்ப்பளிக்க வேண்டும். துமிந்த விடுதலைக்கு மனோ விளக்கம்
Next articleதுமிந்தவுக்கு பொதுமன்னிப்பு : ஜீவன், வேலுகுமார் கையெழுத்திட மறுப்பு?