புலிகளுடனேயே துணிவுடன் மோதியவர்கள் நாம்: நாமல் சூளுரை

” சவால்களைக் கண்டு அஞ்சுபவர்கள் ராஜபக்சக்கள் அல்லர் எனவும், அவ்வாறு அஞ்சுபவர்களாக இருந்திருந்தால் புலிகளுடன் மோதி இருக்கமாட்டோம்.” என்று நாமல் ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

‘” அடக்குமுறை மூலம் மட்டுமே அரசியல் செய்ய முடியும் என தேசிய மக்கள் சக்தி கருதுகின்றது. ஒடுக்குமுறையை எதிர்கொள்வதற்கு நாம் தயார். எம்மை பழிவாங்கினால் பரவாயில்லை, ஆனால் எமது ஆதரவாளர்களை பழிவாங்கல்களுக்கு உட்படுத்த வேண்டாம்.” எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ், இராணுவம் மற்றும் அரச சேவையை விமர்சிப்பதை ஜனாதிபதி முதலில் நிறுத்த வேண்டும் எனவும் நாமல் வலியுறுத்தியுள்ளார்.

எவ்வளவு தடைகள் வந்தாலும் ராஜபக்சக்கள் சவால்களுக்கு அஞ்சமாட்டார்கள். அவ்வாறு அஞ்சுவதாக இருந்தால் புலிகளுடன் மோதி இருக்கமாட்டோம். சமாதான ஒப்பந்தம் செய்திருந்தால் நோபல் பரிசுகூட கிடைத்திருக்கக்கூடும்.” – என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles