புலிகள் அமைப்பின் சொத்துகள் எங்கே? கே.பி. இன்று வெளியிட்ட தகவல் இதோ…

” தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சொத்துகள் எதுவும் என்னிடம் இல்லை. இறுதிபோரின்போது நான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்தேன்.” – என்று புலிகள் அமைப்பின் சர்வதேச வலையமைப்பின் பிரதானியாக கருதப்பட்ட கே.பி. எனப்படும் குமரன் பத்தமநாதன் தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், ” இறுதி யுத்தத்துக்கு பிறகு புலிகளின் சொத்துகள் உங்கள் வசமானது என தகவல்கள் வெளியாகின. அந்த சொத்துகளுக்கு என்ன நடந்தது” என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே கே.பி. மேற்கண்டவாறு கூறினார்.

” இறுதிபோரின்போது நான் மலேசியாவில் தலைமறைவாகியிருந்தேன். எனக்கு எந்தவொரு சொத்தும் வழங்கப்படவில்லை. நாளாந்த செலவுக்கே பணம் வழங்கப்பட்டது. அவ்வாறு சொத்துகள் இருந்திருந்தால் எமது மக்களை அழிவில் இருந்து மீட்டிருக்கலாம்.

அவர்கள் (புலிகள்) எவ்வாறான சொத்துகளை விட்டுச்சென்றனர் என்பது எவருக்கும் தெரியாது. எனவே, இப்பிரச்சினைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.” – என்றார்.

Related Articles

Latest Articles