இன்றுகாலை மன்னார் பேசாலை சாப்பாட்டுக் கடை ஒன்றில் காலையுணவு வாங்கியவருக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. குறித்த நபர் கடையில் ரொட்டி வாங்கியிருந்தார்.
ரொட்டியுடன் அவருக்கு வழங்கப்பட்ட குழம்பில் பூரான் இருந்துள்ளது. சாப்பிட தட்டில் ரொட்டியை போட்டு குழம்பை ஊற்றியவருக்கு குழம்பில் பூரான் இருந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
