பெப்ரவரி நடுப்பகுதியில் ஜனாதிபதி மத்திய கிழக்கு நாடுகளுக்கு விஜயம்!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடுப்பகுதியில் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
ஹேமாகம பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.“    எரிசக்தி    துறைக்கு சிறந்த முதலீடுகளை இதன்மூலம் பெறக்கூடிய சூழ்நிலை உருவாகும்.” எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் இலங்கை  தனிமைப்படுத்தப்படும்     என பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டது. இதனை சில தரப்புகளும் நம்பின. ஆனால் நாம் சிறந்த வகையில் சர்வதேச உறவை பேணி வருகின்றோம்.

முதலில் இந்தியாவுக்கு பயணம் செய்திருந்தேன். அதன்பின்னர் சீனாவுக்கு சென்றிருந்தேன். இவ்விரு விஜயங்களின்மூலம் நாட்டுக்கு பல நன்மைகள் கிடைக்கப்பெற்றன. அடுத்து மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளேன்.

கடந்த பெப்ரவரி மாதம்தான் நாடு வங்குரோத்து நிலையிலிருந்து அதிகாரப்பூர்வமாக மீண்டது.” – என்றார்.

Related Articles

Latest Articles