பெற்றோருக்கிடையிலான சண்டையில் சிக்கி 9 வயது மகன் பரிதாபமாக பலி!

கணவன் – மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் சிக்கி அவர்களின் 9 வயது மகன் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் மாத்தறை மாவட்டம், கொஸ்மோதர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இரண்டு பேருக்கும் இடையிலான சண்டையின் போது சிறுவனின் தந்தை, தாயைக் கத்தியால் தாக்கிய போது, கத்தி எதிர்பாராத விதமாக சிறுவனின் தலையில் பட்டுள்ளது.

இதனால், படுகாயமடைந்த சிறுவன் மொரவக்க – கொஸ்னில்கொட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காகக் காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார்.

எனினும், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Latest Articles