“பேஸ் புக்” நிறுவனம் “மெற்றா” ஆகின்றது

முகநூல் உட்பட பிரபல சமூகவலைத்தளங்களை இயக்குகின்ற அமெரிக்கநிறுவனத்தின் பெயர் ‘மெற்றா’ (Meta) என்று மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முகநூல் (Facebook) குழுமத்தின் பெயர்மாற்ற அறிவித்தலை அதன் நிறுவுனர் Mark Zuckerberg நேற்று மாநாடு ஒன்றில் உத்தியோகபூர்வமாக வெளியிட்டார்.

தனிப்பட்ட ஒரு தளமாக முகநூலின்பெயர் தொடர்ந்தும் அவ்வாறே அழைக்கப்பட்டாலும் இன்ஸ்ரகிராம், வட்ஸ்அப்போன்ற பல சமூகவலைத் தளங்களைஉள்ளடக்கிய அதன் தாய் நிறுவனத்தின் பெயரே ‘மெற்றா’ என்று மாற்றப்படுவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

2004 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘பேஸ்புக்’ நிறுவனம் கடந்த 17 ஆண்டுகளாக உலகின் முன்னணி சமூகவலைத்தளமாக விளங்கி வருகிறது.

“மெற்றா” என்ற கிரேக்க மொழிச் சொல்”அப்பால்” , அல்லது “மறுபக்கம்” என்ற அர்த்தத்தை தருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய Mark Zuckerberg, நிறுவனத்தின்எதிர்காலத் தொழில் நுட்ப உத்தியாகிய”மெற்றாவேர்ஸ்”(“metaverse”) என்னும் மெய் நிகர் உலக (virtual world) தரிசன இணையத் தொழில் நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டே பெயர் மாற்றம் செய்யப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

உலக மக்களை இணையம் ஊடாக அதிகரித்த ஒரு மெய்நிகர் யதார்த்தத்தில் ஒன்றிணைக்கின்ற தொழில் நுட்பத்தைத் தயாரிக்கும் பணியில் பல்லாயிரக்கணக்கான நிபுணர்களை முகநூல் நிறுவனம் ஈடுபடுத்திவருகிறது.

மெய்நிகர் உலக தரிசனக் கண்ணாடிகளது (virtual reality glasses) வருகைஇணைய உலகின் அடுத்த பெரும் பாய்ச்சலாகக் கருதப்படுகிறது. ஓர் இடத்தில் இருந்தவாறே உலகின் எந்தப் பகுதிக்குள்ளும் நேரடியாகப் பிரவேசிப்பது போன்ற மெய்நிகர் உலகைத் தரிசிக்கக்கூடிய இந்தக் கண்ணாடிகளை முகநூல் நிறுவனம் ஏற்கனவே அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் எதிர்கால நவீன வடிவம் ‘மெற்றாவேர்ஸ்’ எனப்படுகிறது.

மெற்றாவேர்ஸ் கண்ணாடிகளை அணிந்து கொண்டு நேரடியாகப் பௌதீக ரீதியாக அல்லாமல் மெய்நிகர் காட்சிகளாக உருவாக்கப்பட்ட உலகத்தைத் தரிசிக்க முடியும். உதாரணமாக அமெரிக்காவில் இருக்கின்ற ஒருவர் அந்தக் கண்ணாடியை அணிந்து கொண்டு பாரிஸ் நகரின் சந்துபொந்து எங்கும் நடமாடி ரசிப்பது போன்ற உணர்வைப் பெற முடியும்.பயனாளர்கள் தங்களுக்குள் மெய்நிகர் காட்சிகளைப் பகிர்ந்து அனுபவிப்பதற்கும் அதில் வசதிகள்இருக்கும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles