ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி மீள கிடைக்கப்பெறுமானால் அதனை ஏற்பதற்கு தயாராகவே இருக்கின்றேன் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுபுரிமையில் இருந்து தயாசிறி ஜயசேகர இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவரிடமிருந்து பொதுச்செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தயாசிறி ஜயசேகர நீதிமன்றத்தை நாடியுள்ளார். அத்துடன், விரட்டியடித்தால்கூட தான் சுதந்திரக்கட்சியை விட்டுசெல்லபோவதில்லை எனவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கட்சி தலைவர், பொதுச்செயலாளர் பதவியை மீள வழங்கினால் அதனை ஏற்க தயாரா என எழுப்பட்ட கேள்விக்கு,
” ஆம் நிச்சயம் ஏற்பேன், வழக்கையும் மீளப்பெறுவேன்.” – என பதிலளித்தார்.