ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினாலும் ஜனாதிபதி தேர்தலில் மாற்றம்வரப்போவதில்லை என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலை நடத்தும் காலப்பகுதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு எவ்வித அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை.
தேர்தலுக்கான அழைப்பையும், நாளையும் தேர்தல் ஆணைக்குழுவே தீர்மானிக்கும்.
இரண்டரை வருடங்களுக்கு பின்னர் நாடாளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. அந்தவகையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை நடத்துவதற்கும் தயார். ஏனெனில் அரசமைப்பின் பிரகாரம் செயற்பட வேண்டிய பொறுப்பு எமக்கு உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் இவ்வாறு முன்கூட்டியே நடத்தப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் திகதியில் மாற்றம் வராது. சிலவேளை இரு தேர்தல்களும் அடுத்தடுத்து நடத்தப்படக்கூடும்.” – என்றார்.
