“ 2015 ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளராக களமிறங்குமாறு எனக்கு கிடைத்த வாய்ப்பையே மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கினேன்.’’ – என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ 2015 ஜனாதிபதி தேர்தலின்போது பொதுவேட்பாளராக களமிறங்குமாறு ரணில் விக்கிரமசிங்க என்னிடம் கோரினார். இதற்குரிய வாய்ப்பு எனக்கே வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
அப்போது நான் அவரிடம் 24 மணிநேரம் அவகாசம் கோரினேன். அதன்பின்னர் சந்தித்தேன். தேர்தலில் வெற்றிபெற சுதந்திரக்கட்சியின் வாக்குகள் அவசியம், எனவே, மைத்திரியை களமிறக்குமாறு கோரினேன்.
எந்த மைத்திரி என அவர் என்னிடம் கேட்டார், நான் மைத்திரிபால சிறிசேன என்றேன். அவரை நம்ப முடியுமா என ரணில் என்னிடம் கேட்டார். நான் ஆம் நிச்சயம் என பதிலளித்தேன். ஆனால் மைத்திரி நம்ப முடியாத நபர் என்பது இன்று தெரிந்துவிட்டது.” – என்றார்.
