பொது சுகாதார பரிசோதகர் கொலை: சந்தேகநபர் விமான நிலையத்தில் கைது!

பொது சுகாதார பரிசோதகர் ரொஷான் குமார கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் நாட்டைவிட்டு வெளியேற தயாரானவேளை கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் போலியான பெயரில் துபாய்க்கு செல்வதற்காக வருகை தந்தபோதே கைது செய்யப்பட்டுள்ளார்.கரந்தெனிய பகுதியை வதிவிடமாகக் கொண்ட 30 வயதான ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இருவரால் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், கரந்தெனிய பொது சுகாதார பரிசோதகர் ரொஷான் குமார உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles