“ சரத் பொன்சேகா பாவம், அவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வந்தால் அவரை மஹிந்த ராஜபக்ச ஏற்பார்.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது, சரத் பொன்சேகாவுக்கு மஹிந்தவின் சலூன் கதவு திறக்கப்படுமா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ சரத் பொன்சேகா வந்து கதைத்தால், மஹிந்த நிச்சயம் ஏற்றுக்கொள்வார். முடியாது எனக்கூறி அவரை விரட்டமாட்டார். எது எப்படி இருந்தாலும் பொன்சேகா பாவம்.” – என்றார் எஸ்.பி.










