ஒரு வருடத்துக்கு மேலாக பதில் பொலிஸ் மா அதிபராக பணியாற்றிய சீ.டி.விக்ரமரத்ன இலங்கையில் புதிய பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார்.
இவரின் பெயரை நாடாளுமன்ற பேரவையின் அங்கீகாரத்துக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அனுப்பிவைத்திருந்த நிலையில் அதற்கு இன்று அனுமதி கிடைத்துள்ளது.
நாடாளுமன்ற பேரவை இன்று கூடியது. இதன்போதே ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அனுமதி வழங்கப்பட்டது.
பொலிஸ்மா அதிபராக பதவி வகித்த பூஜித் ஜயசுந்தர, ஈஸ்டர் தற்கொலை குண்டுதாக்குதலையடுத்து கட்டாய விடுமுறையில் அனுப்பட்டார். அதன்பின்னர் 2019 ஏப்ரல் 26 ஆம் திகதி முதல் இற்றைவரை சீ.டி. விக்ரமரத்ன பதில் பொலிஸ்மா அதிபராக செயற்பட்டுவருகின்றார்.
இந்நிலையிலேயே அவர் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படவுள்ளார்.