போக்குவரத்து அமைச்சு ரயில் பயணிகளுக்கு விடுத்துள்ள அறிவிப்பு

எதிர்வரும் திங்கட்கிழமை (16) முதல் 30 குறுகிய தூர ரயில் பயணங்கள் இடைநிறுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

செலவுகளை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ரத்து செய்யப்படும் ரயில் பயணங்கள் கீழே…

பிரதான மார்க்கம்-18
களனிவெளி மார்க்கம் – 2
கரையோர மார்க்கம் – 8
புத்தளம் மார்க்கம் – 2

இதேவேளை, இன்று (13ம் திகதி) அதிகாலை 5 மணியளவில் ஹபரன கல்ஓயா பிரதான ரயில் பாதையில் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற புலதிசி கடுகதி ரயிலில் மோதி யானையொன்று உயிரிழந்துள்ளது.

காட்டு யானையுடன் மோதியதன் காரணமாக ரயிலின் இயந்திரம் தடம்புரண்டிருந்தது. இந்த விபத்து காரணமாக கிழக்கு மாகாணத்தில் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

ரயிலில் அடிபட்ட காட்டு யானை சுமார் 15 மீட்டர் தூரம் ரயில் பாதையில் இழுத்து செல்லப்பட்டது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles