போடைஸ் ஆறு வெகுவிரைவில் அகலப்படுத்தப்படும் – ரவிகுழந்தைவேல் உறுதி

போடைஸ் பகுதி மக்களுக்கு வெள்ள அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஆற்றை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கை துரித கதியில் ஆரம்பமாகும். இதற்கான கண்டிப்பான உத்தரவை இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் பிறப்பித்துள்ளார் – என்று நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் ரவி குழந்தைவேலு தெரிவித்தார்.

போடைஸ் பகுதியில் அடை மழை பெய்ததால் ஆறு பெருக்கெடுத்து, தோட்டப்பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் 50 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை தோட்ட கிராம சேவகர் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது எனவும் ரவி குழந்தை வேலு தெரிவித்தார்.

” போடைஸ் பகுதியிலுள்ள ஆற்றை அகலப்படுத்துவதற்கான நடவடிக்கையை ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கான கோரிக்கை அரச அதிபரிடமும் விடுக்கப்பட்டிருந்தது. எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் பணிகள் தாமதமடைந்தன. அண்மையில்கூட இது குறித்து பேச்சு நடைபெற்றது. இதற்கிடையில்தான் திடீரென வெள்ளம் புகுந்துள்ளது.

ஆற்றை விரைவில் அகலப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு எமது பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். வெகுவிரைவில் அதற்கான நடவடிக்கை இடம்பெறும்.

 அதேவேளை, எல்பியன் பகுதியிலுள்ள தோட்ட குடியிருப்பொன்று மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. அவர்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles