வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட மிலானோ வகையான சிகரட், ஹேஸ் வகையான போதைப்பொருள் மற்றும் கஞ்சா ஆகியவற்றுடன் நபர் ஒருவர் கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் 35 வயதுடைய எத்பட்டிய பிபிலேகம பகுதியை சேர்ந்த சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஹிங்குருகடுவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய ஹிங்குருகடுவ பொலிஸ் குழு ஒன்று எத்பட்டிய பகுதிக்கு சென்று சந்தேகத்துக்கு இடமான வீட்டை சுற்றி வளைத்து தேடுதலை மேற்கொண்ட போது சிகரட் உட்பட போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மிலானோ வகையான சிகரட் 240 , 15 கிராம் கஞ்சா, 5 மில்லி கிராம் ஹேஸ் ரக போதைப்பொருள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மொனராகலை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்தி உடகம் சூரிய, மொனராகலை பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் அத்தியட்சகர் காலகே ஆகியோரின் ஆலோசனையின் பேரில் ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டாரவின் வழிநடத்தலில் ஹிங்குருகடுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த சந்தேக நபரை பசறை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஹிங்குருகடுவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
ராமு தனராஜா
