கேரள கஞ்சா போதைப் பொருளை கடத்திய குற்றச்சாட்டில் 10 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்பு திணைக்களம் இணைந்து நேற்று முன்னெடுத்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 434 கிலோகிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அதன் பெறுமதி 130 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது,
கேரள கஞ்சா தொகையை நாட்டின் கடல் எல்லைக்குள் பிரவேசித்து, இலங்கையர்களிடம் பரிமாற்றும் சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்போது, ஐந்து இந்திய பிரஜைகளும் 05 இலங்கையர்களும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், படகுகளுத் பரிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் கல்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,










