போராட்டத்தை வழி நடத்தியவர்களை கைது செய்ய வெண்டும் என்று ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
வெலிமடை பகுதியில் நடைபெற்ற அரசியல் நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
போராட்டக்காரர்களை இலக்கு வைத்தே புதிய புனர்வாழ்வு சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளது என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டையும் நாமல் நிராகரித்தார்.
” போராட்ட அலையை பார்த்து அப்பாவி இளைஞர்கள் களத்துக்கு வந்தனர், மேலும் சில இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர். அவ்வாறான இளைஞர்களை தண்டிப்பது தவறு. அவர்களை சிறையில் அடைக்காமல் சமூகமயப்படுத்த வேண்டும். ஆனால் போராட்டத்தை வழிநடத்தியர்கள் கைது செய்யப்பட வேண்டும்.” – என்றார் நாமல் ராஜபக்ச.
