” பௌத்தர்களின் பொறுமையை சோதிக்காதீர்: வடக்கில் தமிழ் இனவாதத்துக்கு முடிவு கட்டுங்கள்”

“பௌத்தர்களின் பொறுமையைச் சோதிக்க முற்பட வேண்டாம் என இந்த அரசாங்கத்திடம் கூறிவைக்க விரும்புகின்றேன். வடக்கில் தலைதூக்கும் தமிழ் இனவாதத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.” – என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச வலியுறுத்தினார்.

தனியார் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவையாவன:

“அரசாங்கம் என்பது கப்பல்; மக்கள் என்போர் சமுத்திரம். அந்த சமுத்திரத்தால் கப்பலைப் பாதுகாப்பாகக் கரை சேர்க்கவும் முடியும், அபாயகரமான அலையை உருவாக்கி கவிழ்க்கவும் முடியும். இக்கூற்று சீனாவில் உள்ள மன்னர் ஒருவருக்கு அவரது ஆலோசகர் வழங்கிய ஆலோசனையாகும்.

எனவே, இந்த நாட்டின் பௌத்தர்களின் பொறுமையை பரிசோதிக்க வேண்டாம் எனக் கூறிவைக்க விரும்புகின்றேன்.

இனவாதத்திற்கு இடமில்லை என ஜனாதிபதி வடக்குக்குச் சென்று கூறுகின்றார். அப்படியானால் தலைதூக்கும் தமிழ் இனவாதத்தையும் தடுக்க வேண்டும்.

திலீபனை நினைவுகூர இடமளிக்கப்படுகின்றது; மாணவர்கள், ஆசிரியர்கள் வந்து அஞ்சலி செலுத்தும் நிலையும் காணப்படுகின்றது. இது இனவாதம் இல்லையா? இனவாதத்தைத் தடுப்பதாயின் அனைத்துப் பக்கங்களிலிருந்தும் வரும் இனவாதமும் முடிவுகட்டப்பட வேண்டும்” – என்றார் விமல் வீரவன்ச .

Related Articles

Latest Articles