இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 3ஆவது T-20 போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 169 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.
அணித்தலைவர் குசல் மெண்டிஸின் அதிரடி ஆட்டத்தால் T20 தொடரில் இலங்கை அணிக்கு ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது. குசல் மெண்டிஸ் 9 பவுண்டரிகள், 4 சிக்கஸர்கள் அடங்களாக 48 பந்துகளுக்கு 87 டிஓட்டங்களைப் பெற்றார்.
முதல் இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களைப் பெற்றார்.
