2027 பட்ஜட்டிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு அவசியம்

2027 பட்ஜட்டிலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு கொடுப்பனவு அவசியம்

தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு தற்போதய வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப அதிகரித்து வழங்கப்பட வேண்டும். அத்துடன் அது சகல தோட்டத் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதற்கும் வழி வகுக்க வேண்டும் ன இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,

” கடந்த வருடம் வரவு செலவு திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட 200 ரூபா கொடுப்பனவு தோட்டங்களில் தொழில் புரியும் சகல தொழிலாளர்களுக்கும் வழங்கப்படவில்லை. எனினும் இவ்வருட வரவு செலவு திட்டத்தில் இக்குறைப்பாடு நீக்கப்பட்டு தோட்டங்களில் தொழிலாளர்களாக தொழில் புரியும் சகலருக்கும் இத்தொகை கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.

அத்துடன் தனியார் தோட்டங்களில் தொழில் புரியும் மற்றும் சிறுதோட்ட உரிமையாளர்களின் தோட்டங்களில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கும் இந்த கொடுப்பனவு கடந்த முறை கிடைக்கவில்லை. அரசாங்கம் இக் குறைபாட்டை நீக்கி தோட்டங்களில் வேலை செய்யும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இக் கொடுப்பவை வழங்க வழி செய்ய வேண்டும்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வரலாற்றில் முதல் முறையாக அரசாங்க வரவு செலவுத் திட்டத்தின் மூலம் விசேடமாக தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்க நிதியிலிருந்து கொடுப்பனவு வழங்கும் முறையை ஆரம்பித்து வைத்தார்.

கடந்த காலங்களில் இவ்வாறான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதும் அப்போதே அரசாங்கங்கள் இதை கண்டு கொள்ளவில்லை. எனினும் தற்போதைய அரசாங்கம் நாளொன்றுக்கு 200 ரூபாய் வீதம் அரச நிதியிலிருந்து வழங்கி தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை செலவுக்கு பங்களிப்பை நல்கியிருக்கிறது. எனினும் தற்போதைய வாழ்க்கைச் செலவை ஈடு செய்வதற்கு இது போதுமானது அல்ல. அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களின் நிலை அறிந்து எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இத்தொகையை அதிகரித்துக் கொடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

பெருந்தோட்ட நிறுவனங்கள் தத்தமது தேவைக்கேற்ப தொழிலாளர்களை வகை பிரித்து பயன்படுத்தி வருகின்றன. எனினும் சகல தொழிலாளர்களிடமும் சமமான வேலை வாங்கப்படுகிறது. இதே போல வேலை நேரத்திலும் எவ்விதமான வித்தியாசமும் இல்லை. ஆனால் கொடுப்பனவில் பாரபட்சம் காட்டப்படுகிறது. இந்நிலையைப் போக்கும் பொருட்டு அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு தோட்டங்களில் வேலை செய்கின்ற சகல தொழிலாளர்களுக்கும் கிடைக்க வழி வகுக்க வேண்டும்.

அதேபோல தேயிலை உற்பத்தித் துறையில் அதிகமான பங்களிப்பை நல்குகின்ற தனியார் தோட்ட தொழிலாளர்களுக்கும், சிறு தோட்ட உரிமையாளர்களின் தோட்டங்களில் பணிபுரிகின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவு இதுவரை கிடைக்கவில்லை. இந்நிலையை மாற்றி தோட்ட தொழில் துறையில் பணிபுரிகின்ற சகலருக்கும் அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவை கிடைப்பதற்கு வழி செய்ய வேண்டும். .

அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை சாதகமாக பரிசீலிக்க வேண்டுமென ஜனாதிபதி அவர்களை வேண்டுகிறோம்.” எனவும் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ள

Related Articles

Latest Articles