சர்வக்கட்சி இடைக்கால அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கையொன்றின் ஊடாக மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கூட்டறிக்கையின் பிரதிகள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல், பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு தீர்வுகாண அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும், இக்கட்டான சூழ்நிலையிலும் கட்சி அரசியலை முன்னெடுக்க அரசியல் வாதிகள் முற்பட்டால் மக்களின் கடும் சீற்றத்துக்கு அவர்கள் உள்ளாவார்கள் எனவும் மகாநாயக்க தேரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
