மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாதீட்டில் நிதி ஒதுக்கீடு!

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய பாதீட்டில் நிதி ஒதுக்கீடு!

2026 வரவு செலவுத் திட்டத்திற்கான முன்மொழிவுகளைப் பெறுவதற்கு ஜனாதிபதி மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் சந்திப்பு

மக்களின் அடிப்படை மற்றும் அவசர தேவைகளை பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கீடுகள்

 

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கான பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை தயாரிக்கும் போது மாவட்ட மட்டத்தில் மக்களின் அடிப்படை மற்றும் அவசரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதன் அவசியத்தை இதன்போது ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மாவட்ட அளவில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி மற்றும் மக்களின் ஏனைய அவசர அபிவிருத்தித் தேவைகள் தொடர்பில் இனங்கண்டு, அத்திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபொன்சு, அரச நிதித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஈ. ஏ. ரத்னசீல, தேசிய வரவு செலவுத் திட்டத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் நாயகம் எம். அனோமா நந்தனி மற்றும் நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2025-05-29

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles