மக்களின் பசி தீர்க்கவே ஜனாதிபதித் தேர்தலில் கட்சி வேறுபாடின்றி, சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ‘பெண்கள் எங்கள் பலம்” என்ற பெண்கள் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.