மக்கள் போராட்ட முன்னணி உதயம்!

‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய கூட்டணியொன்று இன்று(19)உருவாக்கப்பட்டுள்ளது.

போராட்டக்களத்தில் இருந்த தரப்பினர், சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சில இதனுடன் இணைந்துள்ளன.

அதனடிப்படையில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் மக்கள் போராட்டக்கள அமைப்பின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினருமான வசந்த முதலிகே, மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பின் செயலாளர் லஹிரு வீரசேகர, மக்கள் பேரவைக்கான அமைப்பின் சட்டத்தரணி நுவான் போபகே, ஊடகவியலாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் தரிந்து உடுவரகெதர உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி, சோசலிச மக்கள் கூட்டமைப்பு ஆகியனவும் இதனுடன் இணைந்துள்ளன.

 

Related Articles

Latest Articles