மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசறை – மடுல்சிமை வீதியில் அமுனுதோவ கல்லுக்கடைக்கு அருகாமையில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஆட்டோ சாரதி உட்பட அதில் பயணித்த மேலும் இருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
மேலும் , மேலதிக வகுப்புக்கு சென்று வீடு திரும்பி கொண்டிருந்த 16 வயதுடைய கலபாரதிபுறம் மஹதோவ பகுதியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் குறித்த ஆட்டோவில் மோதுண்டு காயமடைந்துள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 16வயதுடைய மாணவன் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்க பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மேலதிக விசாரணைகளை மடுல்சிமை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமுதனராஜ்
