மணமகளுக்கு செலவளித்த பணத்தைக் கேட்டு மணமகன் பொலிஸில் முறைப்பாடு!

மணமகள் பார்ப்பதற்காக, அவரின் வீட்டுக்கு சென்றபோது, வாங்கிச்சென்ற பொருட்களுக்கு செலவிட்ட பணத்தை மீளத்தரும்படிகோரி, பொலிஸ் நிலையத்தில் மணமகன் முறைப்பாடு செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

பானந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதான நபரொருவரே மினுவங்கொட பொலிஸ் நிலையத்தில் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மணப்பெண் மினுவங்கொட பிரதேசத்தை சேர்ந்த 43 வயதானவராவர். இவரது பெற்றோர் தங்களது மகளுக்கு தகுதியான மணமகனைத் தேடி பத்திரிகையொன்றில் விளம்பரம் செய்திருந்தனர்.

விளம்பரத்தை பார்த்த முறைப்பாட்டாளர் உறவினர்களுடன் பெண் பார்க்க அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அதன் பின்னரும் நான்கு தடவைகள் பெண் வீட்டுக்குச் சென்றுள்ளார். பெண் வீட்டுக்குச் செல்லும் சந்தர்ப்பங்களில் அவர் கேக், வாழைப்பழம் உட்பட மேலும் சில பொருட்களை எடுத்துச்சென்றுள்ளார்.

இப்படி இருக்கும் போது 43 வயதான மணமகள், 48 வயது மணமகனை தமக்கு பிடிக்கவில்லை என பெற்றோர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமுற்ற நபர், மணமகள் வீட்டுக்கு சென்ற போது வாங்கிச் சென்ற பொருட்களுக்கு செலவிட்ட பணத்தை மீளப்பெற்றுத் தரும்படி மினுவங்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

பொலிஸார் மணமகள் வீட்டாரையும் பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணைகளை மேற்கொண்டனர். அப்போது மணமகள் வீட்டார் பெண் பார்க்க வந்த போது அவர்களை உபசரிக்க செலவிட்ட பணத்தை மீளப் பெற்று தரும்படி தெரிவித்து பணம் வழங்க மறுத்துள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles