மண்ணெண்ணெய் அடுப்புக்கான மவுசு அதிகரிப்பு – விலையும் எகிறியது!

மண்ணெண்ணெய் அடுப்பு, மின்சார அடுப்பு ஆகியவற்றின் விலைகள் சடுதியாக அதிகரித்துள்ளன என்று நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 2 ஆயிரம் ரூபாவுக்கு விற்கப்பட்டுவந்த மண்ணெண்ணெய் அடுப்பு தற்போது 6,500 ரூபா முதல் 8,000 ரூபாவரை விற்பனை செய்யப்பட்டுவருகின்து.

நாட்டில் எரிவாயு அடுப்புகள் வெடிப்பதாலும், சமையல் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ளதாலும் மக்கள் மாற்று தேர்வுகளை நாடியுள்ளனர்.

கிராமப்புறங்களில் உள்ளவர்கள் விறகடுப்பை பயன்படுத்துகின்றனர். விறகு பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளற்ற நகர வாசிகள் விறகு மற்றும் மின்சார அடுப்புகளை பயன்படுத்திவருகின்றனர். இதன்காரணமாகவே அவற்றுக்கான கேள்விகள் அதிகரித்து, நிரம்பல் குறைந்துள்ளதால் விலை உயர்வு உச்சம் பெற்றுள்ளது.

மேற்படி அடுப்புகளுக்கு சந்தையில் பெரும் தட்டுப்பாடும் நிலவுகின்றது.

அதேவேளை, மண்ணெண்ணை வாங்கும் அளவும் தற்போது அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles