மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் பலி – இருவர் காயம்!

கண்டி – ரம்புக்வெல, அங்கும்புர பகுதியில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் பெண்ணொருவர் பலியாகியுள்ளார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 56 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

 

Related Articles

Latest Articles