நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில், மதுபானசாலைகள் திறக்கப்பட்டமைக்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
அத்துடன், பல நெருக்கடிக்கு மத்தியிலும் கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்பட்டுவந்த நடவடிக்கைகளை குழப்பும் விதத்திலேயே இச்செயற்பாடு அமைந்துள்ளதாக மேற்படி சங்கத்தின் பிரதிநிதியான வைத்தியர் பிரசாத் கொலம்பகே சுட்டிக்காட்டினார்.
மதுபானசாலைகளை திறப்பதற்கு அரசாங்கமோ அல்லது கலால் திணைக்களமோ அனுமதி வழங்கவில்லையெனில், அது தொடர்பில் விசேட விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வைத்தியர் வலியுறுத்தினார்.
அதேபோல இலங்கை மருத்துவர் சங்கம் உட்பட மேலும் சில சங்கங்களும் இதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.