மத்திய மாகாணத்தில் 7 நாட்களில் 1,590 பேருக்கு கொரோனா!

மத்திய மாகாணத்தில் கடந்த 7 நாட்களில் ஆயிரத்து 590 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஜுன் 13 முதல் 19 ஆம் திகதிவரையான காலப்பகுதியிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 625 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 675 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 290 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பயணக்கட்டுப்பாடு அமுலில் உள்ள காலப்பகுதியிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறிப்பிட்டுகூறுமளவுக்கு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Paid Ad
Previous articleபொருளாதார மத்திய நிலையங்கள் நாளை முதல் திறப்பு
Next articleலிந்துலையில் விபத்து – 3 பிள்ளைகளின் தந்தை பலி!