மனோவின் அறிவிப்புக்கு கண்டி மாவட்ட இளைஞர் அணி வரவேற்பு!

” கண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது கண்டி தமிழர்களின் அடையாளம். தமிழர் அரசியல் இருப்புக்கான பாதுகாப்பு அரண். எனவே, அப்படியான பிரதிநிதித்துவம் அவசியம் என்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரின் கருத்தை வரவேற்கின்றோம்.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் கண்டி மாவட்ட இளைஞர் அணியின் அமைப்பு செயலாளர் ஜீவன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” எமது நாட்டில் முடியாட்சியின்போது கண்டியை ஆண்ட கடைசி மன்னன் தமிழன், குடியாட்சியின்போது பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்தாலும் அது இல்லாமல் செய்யப்பட்டது. எனினும், 2 தசாப்தங்களுக்கு பிறகு கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்தே, தமிழ் பேசும் மக்களின் குரலாக வேலுகுமார் அவர்களை அதிஉயர் சபைக்கு அனுப்பிவைத்தனர். அவரின் காலை வாருவதற்கும், கழுத்தறுப்பு செய்வதற்கும் பேரினவாதம் கங்கணம்கட்டி செயற்பட்டது. இருந்தும் மக்களுக்காக பல முனை சவாலை ஏற்று, அதில் வெற்றிபெற்றார்.

இப்படிபட்ட ஒருவர் மக்களுக்கு எதிராக செயற்படமாட்டார். அவர் எடுத்த முடிவில் நிச்சயம் நியாயம் இருந்திருக்கும். அதனை புரிந்துகொள்ளாமல் அவருக்கு எதிராக அறிவிப்புகள் வந்ததாலேயே இளைஞர்கள் என்ற அடிப்படையில் நாமும் கொதிப்படைந்தோம். கண்டி மாவட்ட தமிழர்களின் அடையாளத்தை அவ்வளவு எளிதில் விமர்சனங்களுக்கு உள்ளாவதற்கு நாமும் இடமளித்துவிடமாட்டோம்.

கண்டி மாவட்டத்துக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவம் கிடைத்ததால் மக்கள் அடைந்த பலன் ஏராளம். அதனால்தான் கண்டி வரலாற்றில் தமிழர் ஒருவரை மக்கள் இரு தடவைகள் பாராளுமன்றம் அனுப்பிவைத்தனர்.” – என்றுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles