மனோ அணியின் ஆதரவுடன் ஐதேகவின் பட்ஜட் நிறைவேற்றம்!

ஐக்கிய தேசியக் கட்சியின் கட்டுப்பாட்டின்கீழுள்ள கொழும்பு மாநகரசபையின் வரவு- செலவுத் திட்டம் மேலதிக 79 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 90 வாக்குகளும், எதிராக 11 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

கொழும்பு மாநகரசபையில் நேற்று பாதீடு முன்வைக்கப்பட்டது. இரவு 9 மணிவரை விவாதம் இடம்பெற்றது. அதன்பின்னர் நடைபெற்ற வாக்கெடுப்பின் பாதீடு நிறைவேறியது.

கொழும்பு மாநகரசபையில் 119 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் நிலையில் 101 பேர் வாக்கெடுப்பில் பங்கேற்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, சுதந்திரக்கட்சி என்பவற்றின் உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

Related Articles

Latest Articles