மனோ – மைத்திரி சந்திப்பு! ‘விகிதாசார’ தேர்தல் முறைமைக்கு ஆதரவு!!

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

தேர்தல் முறைமை தொடர்பில், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைபாட்டை அறிவதற்காகவும், அதுபற்றி கலந்துரையாடவுமே மைத்திரிபாலவை தாம் சந்தித்தார் என மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட மனோ கணேசன் கூறியவை வருமாறு,

” தேர்தல் நடக்க போகிறதோ, இல்லையோ, ஆனால், தேர்தல் முறைமையை பூரணமாக மாற்றி விகிதாசார முறைமையை ஒழித்து, கலப்பு முறைமையை கொண்டு வந்து, சிறிய கட்சிகளின் பிரதிநிதித்துவங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தி, இந்நாட்டில் இரண்டு கட்சி ஆட்சியை நிலைபெற செய்ய அரசாங்கம் கங்கணம் கட்டி செயற்படுகிறது.

இதற்கு உறுதுணையாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கலப்பு முறைமையை ஆதரிக்கிறது என தெரிவுக்குழு தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவுக்குழுவில் அறிவித்துள்ளார்.

இது ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் பொது செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோர் என்னிடம் நேரடியாக அறிவித்திருந்திருந்த நிலைப்பாட்டுக்கு முரணாக உள்ளது என நான் இச்சந்திப்பின் போது முன்னாள் ஜனாதிபதிக்கு எடுத்து கூறினேன்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியே இன்று நாட்டில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. இந்நிலையில் உத்தேச கலப்பு தேர்தல் முறை தமிழ், முஸ்லிம் கட்சிகளை மட்டுமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஜேவிபி ஆகிய கட்சிகளையும் அழித்து விடும் என்று மைத்திரிபாலவிடம் நான் எடுத்து கூறினேன்.

தற்போது தமிழ், முஸ்லிம் கட்சிகளுடன் இணைந்து ஜேவீபி, ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் விகிதாசார முறைமையையே ஆதரிக்கின்றன. கலப்பு முறைமையை எதிர்கின்றன.

கலந்துரையாடலின் போது, எமது நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைவர் மைத்திரிபால சிறிசேன, தெரிவுக்குழு தலைவர் அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறுவது பிழை. அங்கே எமது கட்சின் நிலைப்பாடு சரிவர கூறப்படவில்லை. விரைவில் நமது கட்சியின் அதிகாரபூர்வ குழு அங்கே வந்து எமது நிலைப்பாட்டை அறிவிப்போம்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கலப்பு முறைமையை ஏற்றுக்கொள்ளாது. நாம் விகிதாசார முறைமையையே ஆதரிக்கிறோம். உள்ளூராட்சி தேர்தலில் கலப்பு முறைமை இருக்கலாம். ஆனால், மாகாணசபை, பாராளுமன்றம் ஆகியவருக்கு விகிதாசார முறைமையையே சரியானது. இதுவே எங்கள் நிலைப்பாடு என கூறினார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles