மரணத்திலிருந்து மீண்ட நியூசிலாந்து கிரிக்கெட் நட்சத்திரம்

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கிறிஸ் கெய்ன்ஸ் மரணத்திலிருந்து மீண்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் தலைநகர் கன்பராவில் அவருக்கு ஏற்பட்ட மோசமான மாரடைப்பினால், ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு , உடனடியாக சிட்னிக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தார். பல சத்திர சிகிச்சைகளின் பின்னர் உயிர் பிழைத்த கெய்ன்ஸ், காணொலி வழியாக தனது ரசிகர்களுக்கு நன்றி கூறியுள்ளார்.

நியூசிலாந்தின் சகல துறை ஆட்டக்காரராக பல அணிகளுக்கு ஒரு காலத்தில் சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கிறிஸ் கெய்ன்ஸ், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஆஸ்திரேலியாவில் கன்பராவில் தனது குடும்பத்தினரோடு வசித்து வந்தார்.

தற்போது 51 வயதான கிறிஸ் கெய்ன்ஸ்இ 1989 – 2006 காலப்பகுதியில் நியூசிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளிலும் 135 ஒரு நாள் ஆட்டங்களிலும் இரண்டு ரி20 போட்டிகளிலும் விளையாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles