மரண பீதியை ஏற்படுத்தும் ஆபத்தான மரங்கள்: வெட்டி அகற்றுமாறு மக்கள் கோரிக்கை

ஹட்டன், நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியில் விழுந்த பாரிய மரத்தையும், அச்சுறுத்தலான ஏனைய மரங்களையும் வெட்டி அகற்றுவதற்கு நடவடிக்கை அப்பிரதேச மக்கள் , இலங்கை மின்சார சபையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காசல்ரீ நீர்த்தேக்க பகுதியில் பெய்த கடும் மழையால் பாரிய மரமொன்று கடந்த 11 ஆம் திகதி பிரதான வீதியில் முறிந்து விழுந்தது.

அதன்பின்னர், வீதியின் குறுக்கே விழுந்திருந்த மரத்தின் சில கிளைகளை, பிரதேச மக்கள் வெட்டி அகற்றியிருந்தனர்.

ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியின் டிக்கோயா, சமர்ஹில் பகுதியில் கடந்த 11 ஆம் திகதி இரவு இந்த மரம் முறிந்து விழுந்ததால், அவ்வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் தடைப்பட்டிருந்தது.

ஹட்டன் பொலிஸ் நிலைய அதிகாரிகளும் , பிரதேச மக்களும் இணைந்து வீதியின் குறுக்கே விழுந்த மரத்தின் சில கிளைகளை மட்டுமே வெட்டி அகற்றி, போக்குவரத்திற்காக வீதியைத் திறந்துவிட்டனர்.

எனினும், முறிந்து விழுந்த மரத்தின பாரிய கிளைகள் தேயிலைத் தோட்டத்தில் சிக்கி நிற்பதாகவும், அந்த மரத்தின் கீழேயே வாகனங்களும் , மக்களும் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், மரம் விழுந்த அதே இடத்தில் மேலும் சில மரங்கள் பிரதான வீதியில் முறிந்து விழும் ஆபத்து நிலவுவதால், விழுந்துள்ள மரத்தையும் ஆபத்தான நிலையில் உள்ள ஏனைய மரங்களையும் வெட்டி அகற்றுவதற்கு மின்சார சபை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles