பலாங்கொடை, ராசகல ஊவெல்ல பகுதியில் கித்துல் மரத்தில் இருந்து தவறி விழுந்து நபரொருவர் பலியாகியுள்ளார்.
67 வயதுடைய விக்ரம கருணாதிலக்க என்ற ஓய்வுபெற்ற அதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கித்துல் பூ சீவுவதற்காக 100 அடி உயரமான கித்துல் மரத்தில் ஏறிய சந்தர்பத்தில் மர உச்சியில் இருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்திய சாலையில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலதி விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எம்.எப்.எம். அலி
