மலைநாட்டில் பல பகுதிகளிலும் கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை பெய்துவருகின்றது. இதனால் இயல்பு நிலை முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளது.
நாட்டில் ஊரடங்கு அமுலில் இருந்தாலும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனினும், சீரற்ற காலநிலையால் தொழிலாளர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியிருக்கின்றனர். சிலர் மட்டுமே தொழிலுக்கு செல்லும் நிலைமை காணப்படுகின்றது.
அத்துடன், ஆங்காங்கே மண்சரிவு சம்பவங்களும் பதிவாகியுள்ளன. கடும் குளிரும் நிலவிவருகின்றது.










