மலையக கல்வி அபிவிருத்திக்கு என்றும் துணை நிற்போம்!

கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையானதொரு சமூக மாற்றத்தை ஏற்படுத்தலாம் என உறுதியாக நம்புகின்றோம். எனவே, மலையக கல்வி அபிவிருத்திக்கு நாம் என்றும் துணை நிற்போம் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி தெரிவித்தார்.

கண்டி, மஹியாவ கலைமகள் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு உட்கட்டமைப்பு கையளிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது உரையாற்றிய அவர் மேலும் கூறியவை வருமாறு,

“மஹியாவ கலைமகள் வித்தியாலயமானது வரலாற்று சிறப்புமிக்க பாடசாலையாகும். கண்டி நகர எல்லைக்குள் உள்ள மூன்று தமிழ்ப் பாடசாலைகளில் கலைமகள் வித்தியாலயத்துக்கென தனி சிறப்பு உள்ளது.

இக்கல்லூரியின் அதிபர், எனது ஆசான் திரு சபாபதி அவர்கள், பலருக்கு கல்வி கண் திறந்தவர். மிகவும் சிறப்பாக கல்வி அமுதூட்டி பல நற்பிரஜைகளை சமூகமயப்படுத்தியவர், எனது வாழ்விலும் அவர் மறக்க முடியாத நபர். இன்று நான் சிறந்த நிலையில் இருப்பதற்கு அவர் கற்றுதந்த கணித பாடமும் பெரிதும் கை கொடுத்தது. அவரின் வழிகாட்டதால்தான் பரிட்சைகளில் சிறந்த பெறுபேறுகளை பெறமுடிந்தது.

மிகவும் தலைசிறந்த ஆசானான அவர், ஒரு அதிபராக சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி, இப்பாடசாலையில் பல மாற்றங்களை ஏற்படுத்திவருகின்றார். பாடசாலையின் சாதாரணதரம் மற்றும் உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் திருப்தியடையக்கூடிய வகையில் உள்ளது. பாடசாலை நிர்வாகமும் சிறப்பாக நடைபெறுகின்றது. கலை நிகழ்வுகள், வலய, மாகாண மற்றும் தேசிய மட்ட போட்டிகளிலும் பங்கேற்று திறமையை மாணவர்கள் வெளிப்படுத்திவருகின்றனர்.

அதேபோல இப்பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தினர் சிறந்த முன்னுதாரணத்தை சமூகத்துக்கு வழங்கிவருகின்றனர். இத்திட்டத்துக்குரிய நிதி உதவியை அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனையின் பிரகாரம் நாம் வழங்கி இருந்தாலும் பழைய மாணவர்களின் அர்ப்பணிப்பதால் அந்த நிதிக்கும் மேலதிகமாக நிதி திரட்டி சேவைகளை செய்து, திட்டத்தை பூரணப்படுத்தியுள்ளனர். அவர்களுக்கு நன்றி கலந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுடன் மலையகத்தில் கல்வித்துறையை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை வழங்கி பல திட்டங்களை செயல்படுத்திவருகின்றோம். இந்திய அரசும் எமக்குரிய உதவிகளை வழங்கிவருகின்றது. அறிவெழுச்சி வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அமைச்சர்களான ஜீவன் தொண்டமான், சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தலைமையில் இதற்கான நிகழ்வு இடம்பெறும். இலங்கைக்கான இந்திய தூதுவரும் இந்நிகழ்வில் பங்கேற்பார்.

மத்திய மாகாணசபை ஊடாக மலையக கல்வி மேம்பாட்டுக்கு எனது தந்தை அமரர்அருள்சாமி அவர்கள் வழங்கிய சேவைகளையும் மறந்துவிடமுடியாது. கல்வி புரட்சிமூலமே மலையகத்தில் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தலாம் என நம்புகின்றோம். அதற்காகவே கல்விக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கிவருகின்றோம். மஹியாவ கலைமகள் கல்லூரிக்கு மேலும் நிதி ஒதுக்கீடுகளை வழங்கவும் எதிர்பார்க்கின்றோம்.” – என்றார்.

(க.கிஷாந்தன்)

 

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles