மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கின்ற கூட்டு ஒப்பந்த முறைமைக்கு மீண்டும் செல்லுமாறு தொழில் அமைச்சால் அழுத்தம் கொடுக்க முடியாது – என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அத்துடன், பெருந்தோட்ட முதலாளிமார்கள் ஓரணியில் நிற்கின்றனர். ஆனால் தொழிற்சங்கங்கள் பிளவுபட்டு நின்கின்றன. தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு இதுவும் ஒரு தடையாகும்.
எனவே, உரிமைகளை வென்றெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் பலமடைய வேண்டும் என்றும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா சுட்டிக்காட்டினார்.










