மலையக நகரங்களில் மீண்டும் ‘பத்தி’ வியாபாரத்தில் ஈடுபடும் சிறார்கள்!

சிறுவர் தொழிலாளர்களை உருவாக்கும் பணி மீண்டும் ஆரம்பித்துள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர். அந்தவகையில் கடந்த சில மாதங்களாக நுவரெலியா மாவட்டத்தின் தலவாக்கலை உட்பட சில நகரங்களுக்கு வெளி பிரதேசங்களில் இருந்து பொருட்களை விற்பனை செய்வதற்காக சிறுவர்கள் சிறுமியர்கள் வருகை தராது இருந்தனர்.

இருப்பினும் பயண கட்டுப்பாடு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நிலையில் நேற்று முதல் தலவாக்கலை நகரில் பத்தி வியாபாரத்தில் சிறுவர்கள் ஈடுபட்டு வருவதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக 12 – 15 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்கள் மற்றும் சிறுமியர்கள் இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவ்வாறு அவர்களை பணிக்கு அமர்த்தியுள்ள நபர்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உரிய தண்டனைகளை பெற்றுக் கொடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் முன்வரவேண்டும் என்றும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

தற்போது எழுந்துள்ள பொருளாதார சிக்கல்கள் காரணமாக வாழ்வாதாரத்தை பெற்றுக் கள்வதற்காக இவ்வாறு சிறுவர்களை தொழிலுக்கு பெற்றோர்கள் அனுப்பியிருக்கலாம் என சிலர் கூறினாலும் கூட பாடசாலைக்கு செல்லும் வயதில் உள்ள மாணவர்களை சிறுவர் தொழிலாளர்கள் ஆக பயன்படுத்துவது சிறுவர் உரிமை மீறல் ஆகும். எனவே சிறுவர்களை கல்வி கற்கும் உரிமையை மீறி இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள சகலரையும் சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு பாதுகாப்புத் தரப்பினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

அத்தோடு சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் வெளி பிரதேசங்களிலிருந்து தலவாக்கலை போன்ற நகரங்களுக்கு வரும் இவர்கள் ஊடாக Covid 19 தொற்று பரவாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? எனவே இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் சிறுவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்திலும் நிகழ்ந்திருக்க பாதுகாப்பு தரப்பினர் உட்பட தலவாக்கலை லிந்துலை நகரசபை ஆகியன இணைந்து முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதேச மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவ்வாறான சில வியாபாரங்களில் பல சிறுவர்கள் ஈடுபட்டிருந்தமை தலவாக்கலையில் நடமாடும் வியாபாரத்தில் இவர்களை ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் குறிப்பிடத்தக்கது.

கெளசல்யா

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles