பயணக்கட்டுப்பாடு நடைமுறையில் உள்ள நிலையில் அத்தியாவசிய சேவை என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவர்களும் இருக்கவே செய்கின்றனர். இதனால் பொலிஸ் சோதனை நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அந்தவகையில் நுவரெலியா மாவட்டத்தில் பெருந்தோட்டங்களை அண்டியுள்ள நகரப்பகுதியில் இன்று விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்காக பயன்படுத்தப்படும் வாகங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், உண்மையான நோக்கம் நிறைவேற்றப்படுகின்றனவா எனவும் பொலிஸார் கண்காணித்தனர்.
அத்தியாவசிய சேவைக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதிப் பத்திரமும் பரீசிலிக்கப்பட்டது.
இதன் போது அனுமதி பத்திரமின்றி பயணங்களை மேற்கொண்ட வாகனங்கள், கண்டுபிடிக்கப்பட்டதுடன் காலவதியான ஒரு சில அத்தியவசிய அனுமதி பத்திரத்தினூடாக பயணப்பது கண்டு பிடிக்கப்பட்டன. இந்த நடவடிக்கையின் போது அவர்கள் அனைவரும் திருப்பியனுப்பப்பட்டன.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்
