‘மலையக பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பம்’ -(photos)

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளில் (1-5) இன்று காலை கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பமானது.

தரம் ஒன்று முதல் ஐந்து வரையான மாணவர்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி உற்சாகமாக பாடசாலைகளுக்கு வருகை தந்தனர்.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளிலுள்ள பாடசாலைகள், கடந்த இரு நாட்களாக பெற்றோர் மற்றும் பழைய மாணவர்களால் சுத்தம் செய்யப்பட்டன. சில பாடசாலைகள் இன்று காலையே சுத்தம் செய்யப்படுவதை காணமுடிந்தது.

சுமார் 100 நாட்களுக்கு மேலாக தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிபர், ஆசிரியர்களும் இன்று பாடசாலைகளுக்கு சமூகமளித்திருந்தனர். சில பாடசாலைகளில் ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

முகக்கவசம் அணிதல், கை கழுதுவல், சமூகஇடைவெளி உட்பட சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறு மாணவர்களுக்கு பாடசாலை நுழைவாயிலில் வைத்தே தெளிவுபடுத்தப்படுவதுடன், மாணவர்களுக்கு நோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களை பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Latest Articles