மலையக மக்களின் நம்பிக்கையை வென்ற அரசொன்றை அமைப்போம்!

வடக்கு, கிழக்கு, மலையக மக்களின் நம்பிக்கையையும் வென்ற அரசொன்றை ஸ்தாபிக்கவே தமது எதிர்பார்ப்பாகும் – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

லண்டனில் இலங்கையர்களுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, வடக்கு, கிழக்கில் உள்ள வாக்குகளை பெறுவதற்கு வகுக்கப்பட்டுள்ள வியூகம் என்னவென்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ தேர்தல் வெற்றிக்கு தமிழ் மக்களின் வாக்குகள் அவசியம் என்ற கோணத்தில் நாம் சிந்திக்கவில்லை, செயற்படவில்லை. வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையக மக்களின் நம்பிக்கையை வென்ற அரசொன்றை கட்டியெழுப்புவதே எமது இலக்கு.

தெற்கில் மட்டும் வெற்றிகிடைத்தால் வடக்கு மக்களுக்கு எம்மீது நம்பிக்கை இல்லை என்பதே தெரியவரும். எனவே, வடக்கு,கிழக்கு, தெற்கு மற்றும் மலையக மக்களின் ஒத்துழைப்பு எமக்கு அவசியம். அந்த ஒத்துழைப்புடன்தான் அரசு அமைய வேண்டும் என கருதுகின்றோம்.

வடக்கில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. இளைஞர்கள் மத்தியில் எழுச்சி உள்ளது. கிழக்கில் முஸ்லிம் மக்கள் மத்தியிலும் ஆதரவு வலுத்துவருகின்றது. – என்றார்.

 

Related Articles

Latest Articles