இந்திய வம்சாவளி இலங்கைத் தமிழ் சமூகத்தின் அரசியல் தலைவர்களை இலங்கைக்கான இந்தியததூதுவர் சந்தோஷ் ஜா நேரில் சந்தித்து உரையாடினார். கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத் தில் நேற்று இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது தமிழ்ச் மூகத்தின ;ஒட்டுமொத்த அபிவிருத்திக்கான திட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்பதுடன் பெருந்தோட்ட மக்களின் நலனுக்கான அவர்களின் அனைத்து முயற்சிகளிலும் இந்தியா உறுதியாக நிற்கும் என்று இந்தியத் தூதுவர் தெரிவித்தார்.
இதொகாவின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார், நாடாளுமன்ற உறுப்பினர் உதயகுமார் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை மலையக பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ள இந்திய வீட்டு திட்டம், மலையக மேம்பாட்டுக்காக இந்திய வழங்கியுள்ள விசேட நிதியால் முன்னெடுக்கப்படவுள்ள வேலைத்திட்டங்கள் பற்றியும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.










