மலையக மக்கள் முன்னணி மறுசீரமைப்பு- பிரதித் தலைவராக ராஜாராம் நியமனம்

மலையக மக்கள் முன்னணி மற்றும் அதன் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணி என்பன மறுசீரமைக்கப்பட்டுள்ளன.

இதன்படி புதிய நிர்வாக மற்றும் கவுன்சில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

ஹட்டனில் உள்ள கட்சியின் தலைமை காரியாலயத்தில் வைத்து குறித்த நிர்வாக உறுப்பினர்கள் நேற்று நியமிக்கப்பட்டனர்.

இந்நிலையில் கட்சியின் கவுன்சில் உறுப்பினர்களாக ஆர். ராஜாராம், கண்மணி சிவனேசன்,ஆனந்தன்,தாளமுத்து சுதாகரன்,க.சிவஞானம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் தலைவராக கலாநிதி வே.ராதாகிருஸ்ணனும் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ் விஜயசந்திரன்,பிரதி தலைவராக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.ராஜாராம்,தேசிய அமைப்பாளர் ந.பாலமுரளி, நிதிச்செயலாளர் பி.கிருஸ்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இதேவேளை மலையக மக்கள் முன்னணியின் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியிலும் பதவி மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில் தலைவராக கலாநிதி வே.ராதாகிருஸ்ணன், பதில் செயலாளராக புஸ்பா விஸ்வநாதன்,நிதிச்செயலாளராக தாளமுத்து சுதாகரன்,அமைப்பு செயலாளராக எஸ். ஜெயக்குமார்,பிரதி பொதுச்செயலாளராக க.சிவஞானம் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவராக லெட்சுமனார் சஞ்சய்,செயலாளராக கதிர்காமத்தம்பி சுரேன்,இணைப்பாளராக கலைக்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் அணி தலைவியாக சுவர்ணலதா இலங்கேஸ்வரன்,செயலாளராக கிருஸ்ணவேணி,பிரதி தலைவியாக கலா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதோடு பத்மநாதன் மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்டார்.

இவ்வாறு புதிய உறுப்பினர்கள் மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிற்சங்க பிரிவான மலையக தொழிலாளர் முன்னணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வளவு காலம் கட்சியில் காணப்பட்ட பிணக்குகள் தீர்க்கப்பட்டு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் காலங்களில் மலையகத்தில் மலையக மக்கள் முன்னணி மக்களோடு மக்களாக இருந்ததை விட மேலும் ஒரு படி முன்னோக்கி செல்லும் எந்நேரமும் மக்களுக்காக மலையக மக்கள் முன்னணியின் கதவு திறந்திருக்குமென மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.ராதாகிருஸ்ணன் குறிப்பிட்டார்.

நிருபர் – நீலமேகம் பிரசாந்த்

Related Articles

Latest Articles