ஊவா மண்ணில் அமோக வெற்றி கிடைக்கப்பெற்றால் அடுத்த பிரதமராக அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவாவதற்குரிய வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
பதுளையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்குரிய தீர்மானமும் இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
“ ஊவா மாகாணத்திலிருந்து பிரதமர் ஒருவர் தெரிவாக வேண்டும், 9 தொகுதிகளையும் நாம் வென்று காட்டினால் நாட்டின் அடுத்த பிரதமராக நிமல் சிறிபாலடி சில்வாவை தெரிவுசெய்வதற்குரிய பொறுப்பை நான் ஏற்பேன்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.