மலையக மேம்பாட்டுக்கு ஜப்பானிடம் உதவி கோருகிறது இ.தொ.கா.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தூது குழுவினர் , ஜப்பான் நாட்டின் இலங்கைக்கான தூதுவர் மிசுகோஷி ஹிடேகியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

நாடு எதிர் நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் பல உதவிகளை வழங்கிவருகின்றது.

அத்துடன்,  அண்மையில் உயிரிழந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு , இ.தொ.காவின் தூதுகுழு இச் சந்திப்பின் போது   இரங்கலை தெரிவித்தது.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் மலையகத்தில் ஜப்பான் அரசாங்கத்தினூடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களை செயற்படுத்தவும்,திறன் மற்றும்  தொழில் சார்ந்த கல்வி முறைகளை  உருவாக்குவது தொடர்பில்  ஜப்பான் நாட்டு துதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

 அத்தோடு ஜப்பான் நாட்டிற்கான தொழில்வாய்ப்பு தொடர்பாகவும் இச் சந்திப்பின் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது. மலையக பகுதிகளில் ஜப்பானின் முதலீடுகள் பற்றியும் ஆராயப்பட்டுள்ளது.

மேலும் நாட்டின் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையில் ஜப்பான் அரசாங்கத்தின் நட்பு ரீதியான உதவிகளுக்கும் இதன் போது இ.தொ.கா தூது குழு நன்றி தெரிவித்தனர்.

இச் சத்திப்பில் இடம்பெற்ற  கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான்,  பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்,  சட்டத்தரணி மாரிமுத்து, இ.தொ.காவின் சிரேஷ்ட உறுப்பினர் மதியுகராஜா, கட்சியின் உபதலைவரும்வெளி விவகாரங்களுக்கு பொறுப்பான  பாரத் அருள்சாமி ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

Related Articles

Latest Articles