ஹட்டன் பொலிஸ் அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனிமைப்படுத்தும் ஊரடங்கு சட்ட விதிகளைமீறி இரவுவேளையில் நடமாடுபவர்களை கைது செய்ய ஹட்டன் பொலிஸார் விசேட சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்படி நேற்றிரவு (28) ஹட்டன் மல்லயைப்பூ சந்தி சோதனை சாவடியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது உரிய அனுமதிபத்திரமின்றி அத்தியாவசிய சேவைகளுக்காக சென்றவர்கள், அனுமதி பத்திரமில்லாதவர்கள் கடும் எச்சரிக்கையின் பின் அனுப்பட்டனர்.
எனினும், இனிவரும் காலங்களில் அனுமதி பத்திரமின்றி பயணித்தால் அவர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸார் எச்சரித்தனர்.










