மஹிந்த ராஜபக்சவுக்கு ஏதேனும் நடந்தால் முழு நாடும் கொந்தளிக்கும். பிறகு கோட்டாபய ராஜபக்ச சென்றதைவிடவும் மோசமாகவே தற்போதைய அரசுக்கும் செல்ல நேரிடும். எனவே, மஹிந்தமீது கைவைக்க கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அக்மீமன தயாரத்ன தேரர்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு,
“ முப்படை பலத்தை கொண்டிருந்த புலிகள் அமைப்பை தோற்கடிக்கவே முடியாது என முழு உலகமும் சொன்னது. ஆனால் மாவிலாறுவில் ஆரம்பமான போரை முள்ளிவாய்க்காலில் முடிவுக்குகொண்டுவந்த தலைவர்தான் மஹிந்த ராஜபக்ச.
எனவே, அதிகளவு பாதுகாப்பு உள்ள இடத்தில்தான் மஹிந்த ராஜபக்ச இருக்க வேண்டும். ஏனெனில் புலிகளின் நிழல் இன்னும் தொடரவே செய்கின்றது. அதேபோல தடைவிதிக்கப்பட்டிருந்த புலிகளுக்கு புத்துயிர் கொடுக்கக்கூடிய ஆறு டயஸ்போரா அமைப்புகள்மீதான தடை ரணில் விக்கிரமசிங்க ஆட்சியில் நீக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின் அரசியலை நாம் அனுமதிக்காதபோதிலும் போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் என்ற வகையில் அவரை பாதுகாக்க வேண்டும்.
